நாடாளுமன்றத்துக்குள் புகுந்து சிஜேபி கும்பல் எங்களைத் தாக்கிவிடுமோ என்று அச்சமடைந்தோம் என பாஜக எம்பி கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் அமைதிப் பேரணி நடத்த முயற்சித்தனர்.ஆனால், அவர்களின் பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டனர்.மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தினர்.இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் இன்று பேசிய கங்கனா,“நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் இருந்தோம். அந்தக் கும்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று நினைத்து நாங்கள் அனைவரும் அச்சமடைந்தோம்.ஆனால், எங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் ஒரு கேடயமாகச் செயல்பட்ட தில்லி காவல்துறையினரை நான் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய தில்லி காவல்துறைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், கங்கனா பாராட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.We were intimidated by the CJP mob- Police protected us like shield Kangana's controversial remarks!நாடாளுமன்றத்தில் எதிரொலித்த சிஜேபி போராட்டம்! எதிர்க்கட்சிகள் அமளி!