சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முழக்கமிட்டதால் பிரபல பாடகர் அறிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 'தெருக்குரல் அறிவு' என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் அறிவரசு கலைநேசன், இன்று சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாக திடீரென கோஷமிட்டார். "நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், அதுகுறித்து முதல்வர் பேச வேண்டும்" என்று முழக்கமிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். 'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் மூலமாக பிரபலமான பாடகர் அறிவுதான், தவெக கட்சி கொடிப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடியது குறிப்பிடத்தக்கது. Singer Arivu arrested after raising slogans in front of the Chennai Secretariatதேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!