ரூ.17 கோடி பாம்புக் கடி முறைகேடு! மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் கைது! சினிமா பாணியில் ஒரு கும்பல்

Wait 5 sec.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்கொலை, மாரடைப்பு மரணங்களைா பாம்புக் கடி மரணமாக மாற்றி போலி உடல் கூராய்வு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு இதுவரை ரூ.17 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பாம்புக் கடியால் மரணமடைபவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கும் சத்தீஸ்கர் மாநில அரசின் திட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த மோசடி நடந்துள்ளது.பல்வேறு வகைகளில் மரணமடைந்தவர்களை பொய்யாக பாம்பு கடித்து பலியானதாக போலி உடல்கூராய்வு அறிக்கைகள் சமர்ப்பித்த வழக்குகளை விசாரித்து வரும் காவல்துறை, திங்கள்கிழமை வரை ரூ.17 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. தற்கொலை, மாரடைப்பு போன்றவை பாம்புக் கடி மரணமாக மாற்றப்பட்டு மோசடி நடந்ததில் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டின் உச்சம் என்னவென்றால், பெரும்பாலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இப்படி ஒரு மோசடி நடந்து நிதியுதவி பெறப்பட்டதே தெரிந்திருக்காது என்பதுதான்.வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?சத்தீஸ்கர் பேரவையில், பாஜக எம்எல்ஏ ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளில் 431 பேர் பாம்பு கடித்து பலியானதாகவும், இவர்களுக்கு ரூ.17 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் தரவுகளை வெளியிட்டபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.இத்தனை பாம்புக் கடி மரணங்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் வராத நிலையில், நிதியுதவி எப்படி என்ற கேள்வி எழுந்தது.இது பற்றி விசாரணை நடத்திய போதுதான், இவர்களில் பெரும்பாலானோர் பாம்பு கடித்து பலியாகவில்லை, உண்மையில் பாம்பு கடித்து பலியானவர்களின் குடும்பத்தினர், எவ்வாறு இந்த நிதியுதவியைப் பெறுவது என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.இதுவரை 16 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே புற்றுநோய், உடல்நலப் பாதிப்புகளால் இறந்தவர்களின் விவரங்களைப் பயன்படுத்தியும் மோசடி நடத்தப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி யார்?தாசில்தார் அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக இருக்கும் கோவிந்த் விஸ்வகர்மா, இந்த கும்பலை ஒருங்கிணைக்கிறாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. முதன்மை குற்றவாளியாகக் கருதப்படும் பெண் உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்திருக்கிறார். இவர்தான் போலி உடல் கூராய்வுகளைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். இந்த வழக்கின் விசாரணை எண், பாம்புக் கடி வழக்கில் சேர்க்கப்பட்டு போலி உடல் கூராய்வுடன் அனுப்பி பணம் பெறப்பட்டுள்ளது. இதில் நிதியுதவியைப் பெற்றவர்களும் போலியான உறவினர்கள் என்கிறார்கள் காவல்துறை. தாசில்தார் ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்னும் நிறைய மருத்துவர்கள் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.Rs 17 crore snakebite fraud! Doctors and lawyers arrested! A gang operating in a cinematic style.யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?