தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கச்சேரி தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மலைராஜ் (30). இவா் கட்டடங்களுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் மது அருந்திய நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.