25.7.1976: தமிழ்நாட்டில் மின்சார வெட்டு 25% லிருந்து 30% வரை நாளை முதல் அமல்

Wait 5 sec.

சென்னை, ஜூலை. 24 - தமிழ்நாட்டில் 25 முதல் முப்பது சதவிகித மின் வெட்டு அமல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 26 ம் தேதி காலை ஆறுமணியிலிருந்து இந்த வெட்டு அமலுக்கு வரும்.விவசாயத் தேவைகளுக்கான மின்சார வினியோகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஏற்பாட்டைத் தவிர புதிய கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் எதுவும் கிடையாது.வீட்டுத் தேவைகளைப் பொறுத்த வரையிலும் வெட்டு ஏதும் இராது. மாதமொன்றிற்கு 250 யூனிட்டுகள் வரை உபயோகிக்கலாம். அதற்குமேல் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் கூடுதலாக ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ...... மின் வெட்டு விவரம் வருமாறு.(1) இன்றியமையாத முதன்மைத் தொழில்கள் அல்லாத ஏனைய தொழில் வணிக, நிலையங்களுக்கு முப்பது சதவிகித மின் வெட்டு.(2) இன்றியமையாத முதன்மை தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவிகித மின்வெட்டு.(3) தெரு விளக்குகள்: ஐம்பது சத மின் வெட்டு. அதாவது தெரு விளக்குகள் ஒன்று வீட்டு ஒன்றாக மட்டுமே எரியும்.(4) வீட்டு மின்சார உபயோகத்திற்கு வெட்டு இல்லை. ஆனால் அதிக பட்சம் ஒரு குடும்பம் மாதத்திற்கு 250 யூனிட் வரை உபயோகிக்கலாம். அதற்கு மேல் செலவிடும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் சாதாரண கட்டண விகிதத்துடன் கூடுதலாக ஒன்றரை மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும். அதிகபட்ச அளவு மின் உபயோகிப்பதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர, எக்காரணம் கொண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது. ...ஒலிம்பிக் ஹாக்கியில் புதிய திருப்பம் - செமிபைனலை அடைய இந்தியாவின் நம்பிக்கை புத்துயிர் பெற்றதுஜூலை. 24 - ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவின் கதை அனேகமாக முடிந்து விட்டதாக தோன்றிய நேரத்தில் இன்று ஏற்பட்ட புதிய திருப்பத்தின் பலனாக இந்தியாவுக்கு அதிருஷ்டம் அடிக்க, ஒலிம்பிக் தங்க பதக்க வேட்டையில் இந்தியா தனது திறமையை காட்ட பொன்னான தொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை யன்று இந்தியாவை 1-6 கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு பயங்கர அதிர்ச்சியை அளித்த ஆஸ்திரேலியா இன்று எதிர்பாராத விதமாக அர்ஜெண்டினாவிடம் 2-3 கோல் சுணக்கில் தோற்க ஆஸ்திரேலியாவின் அத்தோல்வி வடியில் இந்தியாவுக்கு செமிபைனலில் நுழைவதற்கான புதிய வாய்ப்பு கிட்டியுள்ளது.அன்று ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்தியாவின் தங்க பதக்க முயற்சிக்கான கதவைச் சாத்விட்டது போல அமைந்ததென்றால் இன்று அதே ஆஸ்திரேலியாவின் தோல்வி இந்தியாவுக்கு கதவைத் திறந்துள்ளது. ...25.7.1976: Power cut ranging from 25% to 30% to be implemented in Tamil Nadu starting tomorrow24.7.1976: செவ்வாய் கிரக செயற்கைக் கோளில் கோளாறு - ஆய்வுகள் பாதிக்கப்படலாம் என அச்சம்