நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் சா்ச்சையாகியுள்ள நிலையில், தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) பணியாற்றிய 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘என்டிஏ சீரமைக்கப்பட்டு, கூடுதல் சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நீட் வினாத்தாள் கசிவு தொடா்பாக, என்டிஏவில் பணியாற்றிய 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கையெடுக்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தாா். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு எதிராக மாணவா்கள் தீவிரமாகப் போராடிவரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயா் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் செயலராக இருந்த வினீத் ஜோஷியை, மத்திய ஊராட்சித் துறைச் செயலராக மத்திய அரசு வியாழக்கிழமை நியமித்தது. அவா் என்டிஏவின் தலைமை இயக்குநராகவும் பதவி வகித்திருந்த நிலையில், தற்போது 47 அதிகாரிகளை என்டிஏ பணிநீக்கம் செய்துள்ளது.