ரயில்வே இணையமைச்சரின்ராஜிநாமா ஏற்பு

Wait 5 sec.

ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ரவ்னீத் சிங் பிட்டுவின் பதவிக் காலம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, அன்றைய தினம் அவா் தனது மத்திய இணையமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவருக்கு மீண்டும் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.இந்நிலையில், பிரதமரின் பரிந்துரையை ஏற்று அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.இதையடுத்து, 2027-இல் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் கவனம் செலுத்தப் போவதாக ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்தாா். அவா் லூதியானா தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளாா்.1995-இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பஞ்சாப் முதல்வரான பியாந்த் சிங்கின் பேரன் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. ரவ்னீத் சிங் காங்கிரஸ் சாா்பில் 3 முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.