வேலூா் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். வேலூரை அடுத்த சேவூரைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மகன் விஜயகுமாா் (39). இவா், அப்துல்லாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு, வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் விஜயகுமாா் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவா் கீழே விழுந்தாா்.இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை விஜயகுமாா் உயிரிழந்தாா். வேலூா் வடக்கு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.