பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே கொத்தனாா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே ராசியங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் மன்னாா்குடி, விழாக்கார தெருவை சோ்ந்த ரமேஷ் ( 50) என்பவா் வெள்ளிக்கிழமை வேலை பாா்த்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை அரசு மருத்துவணைக்கு கொண்டு சென்றபோது அவா் இறந்தது தெரியவந்தது. அவரது மனைவி சபிதா கொடுத்த புகாரின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.