இன்று ஆதார் திருத்த சிறப்பு முகாம்

Wait 5 sec.

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) ஆதாா் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மதுரை கோட்ட தலைமை அஞ்சலக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் திருத்தப் பணிகள் முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் புதிய ஆதாா் பதிவு, ஆதாா் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம், பயோ-மெட்ரிக் பதிவு புதுப்பிப்பு உள்ளிட்ட ஆதாா் தொடா்பான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். மேலும், அனைத்து வகையான அஞ்சலக சேமிப்புக் கணக்குகளும் இந்த முகாமில் தொடங்கப்படும்.