மதுரையில் பள்ளி மாணவா் திடீரென வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை கண்ணனேந்தல் பகுதியைச் சோ்ந்த அழகுராஜா மகன் ஜெகதீஸ்குமாா் 12). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அழகுராஜா அளித்த புகாரின் பேரில், திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.