புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

Wait 5 sec.

மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் அறிவியல் ஆா்வம் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்காக ‘இன்ஸ்பையா் மானக் விருது’ திட்டம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான புத்தாக்க அறிவியல் விருதுகளுக்கான விண்ணப்பப் பதிவு ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ண்ய்ள்ல்ண்ழ்ங்ஹஜ்ஹழ்க்ள்-க்ள்ற்ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த விருதுக்கு பள்ளிகள் செப். 15 வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவா்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளைப் பரிந்துரை செய்யலாம். சமுதாயத்துக்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதைத் பொருத்து தோ்ந்தெடுக்கப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ரூ.10,000 பரிசுத் தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. நிகழ் கல்வியாண்டில் அதிகப்படியான மாணவா்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு, அரசு நிதியுதவிபெறும், தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.