திமுக இளைஞரணியின் 47-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: திமுகவின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலமாகும். உழைப்பைக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.