சில விநாடிகள் மட்டுமே கொண்ட அந்தக் காணொலி இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. இன்றைய இளைஞர்களுக்கு மரியாதை தெரியவில்லை; இப்படிப்பட்டவர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான கருத்துகள் பதிவாகின.ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தச் சம்பவத்தின் முழுமையான காணொலி வெளியானது. உண்மையில் மின் அதிர்ச்சியால் அந்த வயதானவருக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டபோது அருகில் யாரும் இல்லாத சூழலில் அந்த இளைஞர் அவசர முதலுதவியாக செயல்பட்டது தெரியவந்தது. கத்தரிக்கப்பட்ட காணொலியின் காட்சி ஒரு மனிதனின் மனிதநேயத்தையே அகங்காரமாக மாற்றிக் காட்டியிருந்தது. இன்றைய உலகில் தகவல்களின் வேகத்தை விட வேகமாக ஓடுவது மனிதர்களின் முடிவுகள்தான். உண்மையை அறிய பொறுமை இல்லை; ஆராய நேரமில்லை. ஆனால், கருத்து சொல்ல மட்டும் அவசரம் கூடுகிறது.ஒரு செய்தியைப் பார்ப்பதற்கு இன்று பத்து விநாடிகள் போதும். ஆனால், அதன் உண்மையைப் புரிந்து கொள்வதற்கு சில நேரங்களில் 10 நாள்கள் கூட போதுமானதாக இல்லை. அதற்குள் அந்தச் செய்தி உலகம் முழுவதும் சுற்றி வந்து ஆயிரம் தீர்ப்புகளை வழங்கி விடுகிறது.முழுக் கட்டுரையும் படிக்க....