திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் இருவர் தங்களது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் தங்கள் பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக சத்யபிரியா பாலாஜி, துணைத் தலைவராக சண்முகசுந்தரம் மற்றும் குழு உறுப்பினராக ராமையா, பொம்ம தேவன், மணிச் செல்வம் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள், ஏற்கெனவே கடந்த முறையும் அறங்காவலர்களாகப் பணியாற்றிய நிலையில், இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று 6 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையிலும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் மீதம் உள்ள நிலையிலும் அறங்காவலர் குழு தலைவராக செயல்பட்டு வந்த சத்யபிரியா, துணைத் தலைவர் சண்முகசுந்தரம், குழு உறுப்பினர் ராமையா ஆகிய மூவரும் தங்கள் பதவிகளை நேற்று ராஜிநாமா செய்தனர்.தங்கள் ராஜிநாமா கடிதத்தை, திருக்கோயில் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர்கள் அளித்துள்ளனர். பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, மூவரும் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்ததற்கான முழுமையான காரணங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழுவில், இதுவரை மூன்று பேர் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.The Chairman of the Board of Trustees and two trustees of the Arulmigu Subramania Swamy Temple in Thiruparankundram resigned from their posts on Monday.திருப்பரங்குன்றம் மலை அளவீடு விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு