ஆர்ஜென்டீனா வீரர்கள் செய்கையால் சர்ச்சை

Wait 5 sec.

பிஃபா உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு பரிசளிப்பு நிகழ்வின்போது ஆர்ஜென்டீனா வீரர்களின் செய்கையால் சர்ச்சை எழுந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. 32 அணிகளில் இருந்து 48 அணிகளாக விரிவாக்கப்பட்டு, மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெற்றன.நியுஜெர்ஸியின் மெட்லைஃப் மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா-முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் இடையிலான இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நடைபெற்றது.எகிப்துடன் நடைபெற்ற ரவுண்ட் 16 சுற்று ஆட்டத்திலும், இங்கிலாந்துடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்திலும் ஆர்ஜென்டீனா பின்தங்கி இருந்த நிலையில் கம்பேக் ஆட்டத்தால் லேட் கோல்கள் அடித்து வெற்றி வாகை சூடியது.ஆனால் ஸ்பெயினுடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் தாக்குதல் ஆட்டத்துக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் வந்தது. ஸ்பெயின் மிகச்சிறந்த தற்காப்புடன் ஆடியதால், மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணிக்கு பந்து கிடைக்காத நிலை நீண்ட நேரம் நீடித்தது. லா ரோஜாவின் பொறுமையான நிதானமான ஆட்டம், அருமையான மிட்பீல்ட் ஆதிக்கத்தால் ஆர்ஜென்டீனாவால் ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை. ஆர்ஜென்டீனா பார்வர்ட்களின் தாக்குதல் மழுங்கி போய்விட்டது. இரண்டாம் பாதியிலும் ஸ்பெயின் ஆதிக்கம் நீடித்ததால், மெஸ்ஸி தலைமையிலான வீரர்கள் மைதானத்தை சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. மெஸ்ஸி அணிக்கு பின்னடைவு: கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் தான் ஆர்ஜென்டீனா வீரர்கள் வசம் பந்து கிடைத்தது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90 பிளஸ் 3 ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரர் பாவ் குப்ரஸியிடம் மோசமாக நடந்ததால் ஆர்ஜென்டீனா வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாம் மஞ்சள் அட்டை தரப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் 10 பேருடன் ஆட வேண்டிய நிலைக்கு ஆர்ஜென்டீனா தள்ளப்பட்டது.சிறிது நேரத்திலேயே ஸ்பெயின் வீரர் டோரûஸ ஆர்ஜென்டீனா வீரர் லீன்ட்ரோ பர்டேஸ் பெளல் செய்ததால் கிடைத்த ஃப்ரீகிக்கை பயன்படுத்தி ஸ்பெயின் இளம் வீரர் லாமைன் யமால் அடித்த ஷாட்டை தடுத்தார் எமலியானோ மார்ட்டினஸ். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக சேவ்களை மேற்கொண்ட கோல்கீப்பர் என்ற சிறப்பு எமிலியானோ வசம் சென்றது.96-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரர் நிகோ வில்லியம்ஸ் அடித்த ஷாட் கோலுக்கு புகுந்தது. ஆனால் ஆர்ஜென்டீனா வீரர் நிக்கோலஸ் ஆட்மெண்டியிடம் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினா "பெளல்' செய்ததால் கோல் இல்லை என அறிவிக்கப்பட்டது.106-ஆவது நிமிஷத்தில் திருப்புமுனை: ஸ்பெயின் அணி எதிர்பார்த்த திருப்பு முனை 106ஆவது நிமிஷத்தில் ஏற்பட்டது. இளம் வீரர் லாமைன் யமால் வலது புறத்தில் பந்தை அற்புதமாக கடத்தி பெட்ரோ போரோவிடம் அனுப்பினார். பெட்ரோ போரோ அனுப்பிய பாûஸ நிகோ வில்லியம்ஸ் அற்புதமாக ஹெட்டர் மூலம் அனுப்பிதை பயன்படுத்தி பதிலி வீரர் ஃபெர்ரன் டோரஸ் 2 டிபன்டர்கள்கள், கோலி எமிலியானோ மார்ட்டினûஸ கடந்து கோலடித்தார். இதுவே வெற்றி கோலாக அமைந்தது.கூடுதல் நேரத்தை ஸ்பெயின் அணி சிறப்பாக மேலாண்மை செய்தது. இறுதியில் ஆர்ஜென்டீனா வீரர்களால் பதில் கோலடிக்க முடியவில்லை.1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வசப்படுத்தியது ஸ்பெயின். பதிலி வீரர் ஃபெர்ரன் டோரஸ் கூடுதல் நேர கோலால் ஸ்பெயின் (லா ரோஜா) சாம்பியன் ஆனது. இளம் வீரர் லாமைன் யமால் அறிமுகமான முதல் உலகக் கோப்பையிலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனையை நிகழ்த்தினார். 4-ஆவது முறையாக கோப்பையை வெல்லலாம் எனக் கருதிய ஆர்ஜென்டீனாவின் கனவு நனவாகவில்லை.பரிசளிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா தலைவர் ஜியானி இன்பேன்டினோ, மெக்ஸிகோ அதிபர் கிளாடியா, கனடா பிரதமர் மார்க் கார்னிஆகியோர் பரிசளித்தனர்.மஞ்சள், சிவப்பு அட்டை...ஸ்பெயின் வீரர் பாவ் குப்ரஸியை பெளல் செய்த ஆர்ஜென்டீனா வீரர் என்ஸோ பெர்ணான்டஸுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை (சிவப்பு) காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.கடைசி விசிலுக்குபின் ஆர்ஜென்டீனா வீரர் லீன்ட்ரா, ஸ்பெயினின் எரிக், ஜாவியை தள்ளி விட்டதால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.சோகத்தில் ஆர்ஜென்டீனா அணியினர்தோல்வியால் அதிர்ச்சி அடைந்த மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியினர் மைதானத்திலேயே சோகத்துடன் அமர்ந்தனர். கோல் கீப்பர் எமிலியானோ சிறப்பாக சேவ் செய்தாலும், தோல்வியால் அழுதார். ஆர்ஜென்டீனா வீரர்கள் செய்கையால் சர்ச்சைபரிசளிப்பு விழாவின்போது, ஆர்ஜென்டீனா வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் வீரர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அவர்களை பாராட்டாமல் ஆர்ஜென்டீனா வீரர்கள் அந்த இடத்தில் இருந்து தொலை தூரத்துக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்கைக்கு அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.ஸ்பெயின் அணிக்கு உற்சாக வரவேற்புஉலகக் கோப்பையுடன் தலைநகர் மாட்ரிட் திரும்பிய ஸ்பெயின் அணிக்கு திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாட்ரிட் நகர விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து கோப்பையுடன் கேப்டன் ரோட்ரி, பயிற்சியாளர் கோப்பையுடன் இறங்கினர். அப்போது ரசிகர்கள் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பின்னர் சிறப்பு வாகனம் மூலம் நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஸார்ஸுலா அரண்மனையில் அரசர் பிலிப் 5 வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.விருதுகள்தங்கக் காலணி: எம்பாப்பே (பிரான்ஸ்) 10 கோல்கள்தங்கப் பந்து: ரோட்ரி (ஸ்பெயின்)தங்கக் கையுறை: யுனய் சைமன் (ஸ்பெயின்)சிறந்த இளம் வீரர்: பாவ் குப்ரஸி (ஸ்பெயின்)ஸ்பெயின் சாதனைகள்• உலகக் கோப்பையில் ஒரே ஒரு கோல் அளித்தது.• கோப்பை வென்ற மிகவும் மூத்த பயிற்சியாளர் லுயிஸ் டி லா புயுன்டே (65 ஆண்டுகள், 29 நாள்கள்). • தொடர்ந்து 38 ஆட்டங்களில் வெற்றி.ஸ்பெயின் அணிக்கு ரூ.430 கோடி பரிசுத் தொகைபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.430 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா-முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இரு பாதிகளிலும் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. ஸ்பெயின் அணியே முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஸ்பெயின் வீரர் ஃபெர்ரன் டோரஸ் கூடுதல் நேரத்தில் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக அமைந்தது.இதனால் ஸ்பெயின் அணி இரண்டாம் முறையாக உலக சாம்பியன் ஆனது. அந்த அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.430 கோடி வழங்கப்பட்டது. ரன்னரான ஆர்ஜென்டீôனாவுக்கு ரூ.328 கோடியும், மூன்றாம் இடம் பெற்ற இங்கிலாந்துக்கு ரூ.289 கோடியும், நான்காம் இடம் பெற்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.270 கோடியும் பரிசளிக்கப்பட்டது.2030-இல் ஸ்பெயினில் உலகக் கோப்பைவரும் 2030-இல் பிஃபா உலகக் கோப்பை ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. அப்போது கோப்பையை தக்க வைக்க ஸ்பெயின் முனையும். மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளன.