‘என் குழந்தையிடம் பள்ளியை சுத்தம் செய்ய சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன்’... அமைச்சர் விஜய் தமிழன் பேச்சு!

Wait 5 sec.

பள்ளியில் என் குழந்தையை சுத்தம் செய்யச் சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன் எனப் பள்ளி மாணவர்களிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசியது வைரலாகி வருகிறது.சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டடம், சுகாதாரத் துணை மையம் உள்ளிட்டவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று (ஜூலை 21) திறந்து வைத்தார். View this post on Instagram இந்த நிலையில், பெத்தநாயக்கன்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு பள்ளி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.அதன் பின்னர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பள்ளி குழந்தைகளிடம் உரையாடினார். அப்போது அவர், “என் குழந்தையை பள்ளி வகுப்பறையை கூட்ட சொன்னால்கூட தப்பா நினைக்க மாட்டேன். நான் பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள்தான் பள்ளி வகுப்பறையையும் பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்வோம். வகுப்பறையில் உள்ள கரும்பலகைக்கு கரும்மை பூசியதும் நாங்கள்தான். அப்படி படித்ததால்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். நீங்கள் நன்றாக படியுங்கள். வாழ்க்கையில் படிப்பு தான் முக்கியம். பள்ளியில் ஆசிரியர் சொல்வதையும் வீட்டில் அப்பா - அம்மா சொல்வதையும் கேளுங்கள்” எனப் பேசிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.Minister Vijay Tamilan Parthiban urged the students to take responsibility and clean the school themselves.