தேசிய சுகாதார இயக்கம் – தமிழ்நாடு, சென்னையில் உள்ள மாநில சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாகவுள்ள 'ஆலோசகர்-தகவல் தொழில்நுட்பம்', ஆலோசகர், ஆலோசகர் - சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு, பயிற்சியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து பார்ப்போம்... பணி: Consultant (Information Technology)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.40,000 - 60,000தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science, Software Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.பணி: Consultantகாலியிடங்கள்: 8சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 60,000தகுதி: Public Health, Health Management, Social Medicine, Health Informatics, Community Medicine,Preventive, Data Science ஆகிய ஏதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.பணி: Consultant - Health Technology Assessmentகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.40,000 - 60,000வயது : 45-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் Biomedical, Medical Electronics,Biomedical Instrumentation, Medical Technology ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Intern(SHSRC)காலியிடங்கள்: 12சம்பளம்: மாதம் ரூ10,000 -15,000தகுதி: Public Health, Health Management, Public Policy, Social Science, Epidemiology பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை: https://nhm.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.