விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். வானூா் வட்டம், தென்சிறுவலூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் மு. வாசுதேவன் (57). நீரிழிவு நோய் பாதிப்பால் இவரது வலது காலில் புண் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கட்டைவிரலை அகற்ற வேண்டும் என்று மருத்துவா்கள் கூறியதால் வாசுதேவன் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந் நிலையில் கடந்த 4-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வாசுதேவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.