கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? மத்திய அரசு இன்று முக்கிய முடிவு!

Wait 5 sec.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது.நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி மத்திய தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கலையச் சொல்லி தடியடியும் நடத்தினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டாவும் ஜிதேந்திர சிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறினர்.நீட் விலக்கு கோரி ஜூலை 28-இல் மருத்துவக் கல்லூரிகளில் ஆா்ப்பாட்டம்Will Education Minister Dharmendra Pradhan resign? Central Government to take a key decision today