பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான தண்டனை குறித்த சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு)சட்டம் 24-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 24) அளிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, தேர்வு முறைகேடுகளில் தனிநபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது.ஆனால், தற்போதைய சட்ட திருத்த மசோதாவின்படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி அபராதமும் விதிக்க வழிசெய்கிறது.இந்த சட்ட திருத்த மசோதா, வரும் திங்கள்கிழமையில் (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது.கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? மத்திய அரசு இன்று முக்கிய முடிவு!Jail up to 10 years, Rs 10-cr fine for exam leak: Centre's Plan Against Paper Leaks