தர்மேந்திர பிரதான் பதவி விலகுங்கள்: நடிகை ஜோதிகா

Wait 5 sec.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போராட்டமும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. மேலும், இந்தப் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தர்மேந்திர பிரதான் பதவி விலகுங்கள். நாட்டின் எதிர்காலத்துடனும் மாணவர்களுடனும் நான் துணை நிற்கிறேன். கல்வியின் சீர்திருத்ததுக்காகவும், ஜனநாயக இந்தியாவுக்காகவும் பொறுப்புடன் நிற்கிறேன்.சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ் தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளை உங்களைப் போன்றவர்களாக வளர்க்க விரும்புகிறோம். தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஜென் ஸி தலைமுறையினரைப் பார்த்து பெருமை கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். நீட் தேர்வின் மீதான அழுத்தத்தை உடைத்ததற்கும், எங்களை அச்சமற்றவர்களாக உணரச் செய்ததற்கும் சிஜேபியினருக்கு நன்றி என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? மத்திய அரசு இன்று முக்கிய முடிவு!Actress Jyothika has posted that Union Education Minister Dharmendra Pradhan should resign.