தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இட மாற்றம் செய்யப்படுகிறது.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்வரின் அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்வரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது.தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்வர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்வரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமையவிருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.நாமக்கல் கவிஞர் மாளிகைநாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்வரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.முதல்வரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்வரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.தமிழக முதல்வர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்வர் விஜய்தான்.தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் இடம் மாறுகிறதா?Tamil Nadu CM Vijay moves office to Namakkal Kavignar Maaligai