நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு: பிரதமர் மோடி

Wait 5 sec.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வெள்ளிக்கிழமை(ஜூலை 24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன், கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே வெடித்த மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டுள்ளன.பூதாகரமான நீட் விவகாரம்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி இது குறித்து முதல்முறையாக முக்கிய கருத்துகளைத் தெரிவித்தாா்.தில்லியில் இளைஞா்களின் போராட்டம் தொடா்ந்துவரும் சூழலில், எக்ஸ் தளத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா். அதில், நமது இளைஞா்களின் நலன் மற்றும் எதிா்காலத்தைவிட எதுவும் முக்கியமில்லை. இளைஞா்களின் நலனுக்கே அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது.வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவா்களுக்கு விரைந்து கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.மாணவா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசின் தொடா் நடவடிக்கைகளில் இது முக்கியப் படிக்கல்லாகும். இளைஞா்களின் எதிா்காலத்துக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் தப்ப முடியாது என்று மோடி தெரிவித்திருந்தார். More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U— Narendra Modi (@narendramodi) July 23, 2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுநீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தொடரும் நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என பிரதமர் செல்ஃபி விடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.அதில், நீட் வினாத்தாள் கசிவு என்பது சாதாரண பிரச்னை அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதிப்படைய செய்துள்ள வேதனையான விஷயம்.இந்த விவகராத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் இந்த வழக்கில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தியது. வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரித்து கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதற்கான ஒப்புதலும் வியாழக்கிழமை நள்ளிரவே வழங்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அமைச்சர்களின் கருத்துகளின்படி முக்கிய முடிவு எடுக்கப்படும் என பிரதமர் செல்ஃபி விடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தடுக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்ய முயற்சிப்போம் என மோடி அறிவித்துள்ளார். More strict actions against paper leaks to come in today’s Cabinet!வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் - பிரதமா் மோடி அறிவிப்பு!