ஒடிசா மாநிலம் புவணேஸ்வரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:பணி: Stenographer (Grade - II)காலியிடம்: 1தகுதி : +2 தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.பணி: Tax Assistantகாலியிடங்கள்: 7சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ81,100தகுதி : ஏதாவதொரு பிரிவில் பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் 1 மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.பணி: Multi Tasking Staffகாலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.18,000 -ரூ.56,900 தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின்அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 31.3.2026 தேதிக்கு முந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மருத்துவ தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3-ஆவது இடம் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தகுதி, விளையாட்டுத் தகுதி போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து Deputy Commissioner of Income Tax, Ist Floor, Aayakar Bhawan, Rajaswa Vihar, Bhubaneswar, Pin-751 007 என்ற அஞ்சல் முகவரிக்கு முன் பதிவு, விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள்: 31.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Applications are invited from meritorious sportspersons fulfilling the eligibility criteria as per the particulars mentioned in Annexure-I for appointment to the following posts under sports quota in Income Tax Department, Odisha Region