தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள், மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்றும் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தொடரும் நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என பிரதமர் செல்ஃபி விடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்இந்த நிலையில், நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் எனவும், மாணவர்களின் கோரிக்கை மத்திய அமைச்சரின் பதிவி நீக்கம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிரதமர் மோடி அவர்களே, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நள்ளிரவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் மாணவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை1. தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.2. மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.3. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்காமல், அவர்களின் கோரிக்கை மத்திய அமைச்சரின் பதிவி நீக்கம் என ராகுல் கூறியுள்ளார்.Don’t insult their intelligence with this pathetic midnight videoநீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு: பிரதமர் மோடி