நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் தொடா்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.தொடர்ந்து 5-ம் நாளாக இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கின. அவை தொடங்கியதுமே நீட் வினாத்தாள் கசிவு, தில்லியில் இளைஞர்கள் போராட்டம் மற்றும் இளைஞர்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். Monsoon session: Lok Sabha, Rajya sabha adjourned till 12 noon todayஉங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி! அபிஜீத் தீப்கே