கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் வலுவடைந்து வருவதால், தில்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்ந்து 4 ஆவது நாளாக முடக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, கடந்த ஜூலை 20 அன்று சிஜேபி தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய பேரணியில் தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும், தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தில்லி போராட்டத்துக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் விதமாகத் தொடர்ந்து 4 ஆவது நாளாக இன்றும் (ஜூலை 25) மத்திய தில்லியின் சுமார் 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டு முடப்பட்டுள்ளன. இதுபற்றி, வெளியான தகவலில் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் உச்சநீதிமன்றம், மத்திய தலைமைச் செயலகம், புது தில்லி உள்ளிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்களின் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, தில்லியில் நடைபெறும் போராட்டத்தால் அங்குள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினரால் முடக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிஜேபி போராட்டம்! அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு பாதிப்பு! As the protest by the Cockroach Janta Party intensifies, 18 metro stations in Delhi remain shut for the fourth consecutive day.