நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டு சதி என நடிகரும் பாஜக பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்தார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த சிஜேபி இளைஞர்கள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற இந்தப் பேரணியில், தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.இந்நிலையில் இதுபற்றி நடிகரும் பாஜக பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார், செய்தியாளர்களுடன் பேசுகையில், "ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு அவசியம்தான். காவல்துறையில் சேர வேண்டும் என்றால் தகுதி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவர்கள் பயிற்சி முகாமுக்குச் செல்கிறார்கள். நீட் தேர்வு இல்லை என்றால் நேரடியாக வந்து கல்லூரிகளில் சேர்வார்கள். இந்த போராட்டம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது 13 முறை வினாத்தாள் கசிவு நடந்தது. தற்போது நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள், நீட் தேர்வுக்கான போட்டி அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. இந்த போராட்டம் வெளிநாட்டு சதி. இதில் இளைஞர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. எதற்காக இந்த போராட்டம் என இளைஞர்கள் உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கும்போது அதை சீர்குலைக்கும் வகையில் நடக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. அதிகமான இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா. அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது" என்று பேசினார். Protest against NEET is a foreign conspiracy: Sarathkumarவைரல் விடியோ! மும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் யார்?