சென்னை: எனது 88 ஆவது பிறந்த நாளில் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இனி அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன் அரசியலை அன்புமணி பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதற்காக மருத்தவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தைலாபுரம் இல்லத்தில் இருந்து ஒரே காரில் நிகழ்ச்சி புறப்பட்டு வந்தனர். விழாவில் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது: எனக்கு இன்று 88 ஆவது பிறந்த நாள். இன்று முதல் அரசியல் துறவறம் செய்கிறேன். அரசியல் துறவறம் என்றால், இன்று முதல் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை, பாமகவை அன்புமணி, அவரது துணைவியார் பார்த்துக்கொள்வார்.என்னை பார்க்க வருபவர்கள், என்னிடம் நலம் விசாரிக்கலாம். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு மாறாது என்று கூறினார். Regarding Ramadoss's announcement that he is renouncing politics starting today, on his 88th birthday...குதிரை பேரம் புகார்: திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை!