போலீஸ் தாக்குதலுக்கு எதிராக..! நாளை நாடு தழுவிய பேரணிக்கு சிஜேபி அழைப்பு!

Wait 5 sec.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய பேரணி நடத்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) அழைப்பு விடுத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த சிஜேபி இளைஞர்கள் ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற இந்தப் பேரணியில், தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில், காவல் துறையினரின் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு ஆதரவாக வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மாலை 6 மணியளவில் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்துவதற்கு சிஜேபி இன்று (ஜூலை 25) அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தப் பேரணியை உள்ளூரிலுள்ள மாணவர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தலைமை ஏற்று நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்வது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் யார்?CJP has called for a nationwide rally in support of those who sustained severe injuries in a police attack.