சண்முக பாண்டியன் படத்தில் இணைந்த ஷிவானி ராஜசேகர்!

Wait 5 sec.

இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்ற படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். மறைந்த நடிகரரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் திரு இயக்கும் இந்தப் படத்தினை கேப்டன் சினி கிரேயஷன்ஸ் சார்பாக எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார். தமிழில் அன்பறிவு படத்தில் அறிமுகமான நடிகை ஷிவானி ராஜ்குமார் லெஜெண்டரி நடிகர் ராஜசேகரின் மகளாவார். நடிகை சிவாத்மிகாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷிவானி அடுத்ததாக நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மூன்றாவது படமாக வானவேடிக்கை என்ற சண்முக பாண்டியன் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த வித்யா வாசுலு அகம் என்ற நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் திரைப்படம் கவனம் பெற்றது. சண்முக பாண்டியன் 2015ல் நாயகனாக அறிமுகமானார். பின்னர் 2018ல் வீரன் படத்திலும் 2025ல் படைத் தலைவன், கொம்புசீவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.Welcome on board #shivani_rajashekar#Vaanavedikai Starring @ShanmugaPandian Directed by @dir_thiruProduced by @lksudhish MPA @SamcsMusic Musical #CaptainCineCreations @captaincine2025@mailavvi @rajkamal.art @jiva_karunya95@MpAnand_Pro pic.twitter.com/9eVBnJLpem— Captain MP Anand (@MpAnand_PRO) July 24, 2026வெளியானது லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்தின் 15 பாடல்கள்..! அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி!Shivani Rajashekar joins the cast of Shanmuga Pandian Vaanavedikai