தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள இந்திய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த சிஜேபி இளைஞர்கள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற இந்தப் பேரணியில், தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இந்திய இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது. 'இந்திய இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்ற பதாகைகளுடன் அங்குள்ள இந்தியர்கள் கோஷமிட்டு பேரணி நடத்துகின்றனர். தில்லி போராட்டத்தில் இளைஞர்களை காவல்துறை தாக்கிய புகைப்படங்களையும் அவர்கள் கையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. Justice for Indian youth: Protest in Los Angeles support cjp protestமும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் யார்?