ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு கிட்டதட்ட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-இல் நாளொன்றுக்கு சராசரியாக 36 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், 2025-இல் அதுவே நாளொன்றுக்கு 40 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் 2021-ல் மொத்தம் 13,060 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை 2022-ல் 13,395-ஆகவும், 2023-ல் 13,744-ஆகவும், 2024-ல் 14,112-ஆகவும், 2025-ல் 14,493-ஆகவும் அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆண்களிடையே இரைப்பை புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாக உள்ளது. அதைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோய் காணப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், சுமார் 9% பாதிப்புகளுடன் இரைப்பை புற்றுநோய் இரண்டாம் இடத்திலும் உள்ளன.As per the figures, the daily detection of cancer cases in 2021 was nearly 36 and it has risen to about 40 a day in 2025.கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!