கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமான நிலையில் இன்று (ஜூலை 27) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,608.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 700.05 புள்ளிகள் உயர்ந்து 76,759.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.15 புள்ளிகள் உயர்ந்து 23,965.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், எடர்னல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும். சென்செக்ஸ் 30 பங்குகளில் அனைத்தும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும்.நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.16, 1.08 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.துறைவாரியாக நிஃப்டி ஐடி, மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்து வருகின்றன. Stock Market: Sensex at day high, up 700 pts, Nifty above 23,950