வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

Wait 5 sec.

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 4-ஆவது நாளான நேற்று (ஜூலை 26) பளூதூக்குதல் பிரிவில் இந்தியா அசத்தியுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 65 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டார். இதில், ஸ்னாட்ச் பிரிவில்126 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 286 கிலோவைத் தூக்கு 2-ஆம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் விஜௌ அறிவித்துள்ளார்.இதுதொடர்பான அறிவிப்பில், ”ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது… pic.twitter.com/elI9Q6dUhN— CMOTamilNadu (@CMOTamilnadu) July 27, 2026 CM Vijay announced an incentive of ₹30 lakh for Tamil Nadu athlete Raja Muthupandi, who won a silver medal at the Commonwealth Games.காமன்வென்ல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி!