இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் இன்டர்ஸ்டல்லார் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகுந்த வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று இன்டர்ஸ்டல்லார். கடந்த 2014 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான போது தொழில்நுட்ப ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கவனம் பெற்ற இப்படம் தற்போது ஆண்டிற்கு ஒருமுறை ஐமேக்ஸ் திரைகளில் திரையிடப்படுகிறது. எப்போது மறுவெளியீடு கண்டாலும் கோடிகளில் வணிகமும் நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழ் டிஸ்கவரி சேனல் இன்டர்ஸ்டல்லார் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வடிவத்தை வருகிற ஆக. 15 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் தமிழ் வடிவத்தைக் காண ஆவலாக உள்ளதாகப் பதிவிட்டு வருகின்றனர். நம் ஒற்றுமைக்கு நோக்கம் உண்டு... ஜெய்...! அரசியல் திட்டத்தில் தனுஷ்?Director Christopher Nolan's film Interstellar is set to be released in Tamil.