பெருந்துறையில் ரூ.5.52 கோடிக்கு கொப்பரை ஏலம்

Wait 5 sec.

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.5.52 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,678 மூட்டைகளில் 3 லட்சத்து 68 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.147.99-க்கும், அதிகபட்சமாக ரூ.161.19-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.81.99-க்கும், அதிகபட்சமாக ரூ.150.69-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5.52 கோடிக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.