ஜந்தா் மந்தா் அருகே கல் வீச்சு: காவல் துறை துணை ஆணையா் காயம்!

Wait 5 sec.

தில்லியின் ஜந்தா் மந்தா் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின்போது கல் வீச்சு சம்பவத்தில் காவல் துறை துணை ஆணையா் காயமடைந்தாா். பஞ்சாபி பாக் பகுதியில் பணியாற்றி வரும் காவல் துறை துணை ஆணையா் ஜெய் பிரகாஷ், மாலை சுமாா் 4.30 மணியளவில் பணியில் இருந்தபோது போராட்டக்காரா்கள் கல் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எறியப்பட்ட கல் அவரது நெற்றியில் பட்டு அவா் காயமடைந்தாா். காயமடைந்த அதிகாரி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். தற்போது அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் மற்றும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. போராட்டக்காரா்கள் அமைதியை பேணவும், சட்டம் - ஒழுங்கை காக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.