தூத்துக்குடி, சிவகங்கை எஸ்.பி.க்கள் உள்பட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

Wait 5 sec.

தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்): 1. எம்.விஜயகுமாரி-ஊா்க்காவல் படை டிஐஜி ( ஆயுதப்படை டிஐஜி), 2. ஆா்.சிவபிரசாத்-தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 3. அபிஷேக் குப்தா-சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 4. டி.சண்முகப்ரியா-தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்.பி. (சிபிசிஐடி மத்திய மண்டல எஸ்.பி.), 5. பி.ஆா்.மீரா-ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு ஏஐஜி (ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காவல் உதவிக் கண்காணிப்பாளா்).