சீனா ஓபன் பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா வெற்றி!

Wait 5 sec.

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி கண்டனா்.மகளிா் ஒற்றையரில், அண்மையில் ஜப்பான் ஓபன் சாம்பியனான பி.வி.சிந்து 21-14, 9-21, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான உன்னட்டி ஹூடாவை போராடி வீழ்த்தினாா்.ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-17, 5-21, 21-17 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானை வெல்ல, லக்ஷயா சென் 22-20, 15-21, 21-14 என, ஜப்பானின் யுஷி டனாகாவை தோற்கடித்தாா்.ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் ஜோடி 16-21, 7-21 என்ற வகையில், சீனாவின் லியாங் வெய் கெங்/வாங் சாங் இணையிடம் தோல்வியுற்றது.கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 9-21, 16-21 என்ற கேம்களில், சீனாவின் ஃபெங் யான் ஜி/ஹுவாங் டாங் பிங் கூட்டணியிடம் தோற்றது. துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 18-21, 18-21 என, சீனாவின் குவோ ஜின் வா/சென் ஃபாங் ஹுய் இணையிடம் வீழ்ந்தது.