கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த விளம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.வெற்றிவேல் (26). இவா் கடந்த 21-ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியை கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வெற்றிவேலை புதன்கிழமை கைது செய்தனா்.