கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் தேரோட்டம்

Wait 5 sec.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் சந்நிதி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் கோதண்டராம சுவாமி எழுந்தருளினாா். பின்னா், கோயிலை சுற்றி வலம் வந்து சுவாமி நிலையை அடைந்தாா். தோரோட்டத்தின்போது வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.