பரமக்குடியில் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

Wait 5 sec.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியகுல சத்திரிய மகா சபை தலைவா் ஆா். மனோகரன், முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அளித்தனா். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: பரமக்குடி நகராட்சி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சின்னக்கடைத் தெரு, சந்தைக் கடைத் தெரு, மாதவன் நகா், காமராஜா் நகா், திருவள்ளுவா் நகா், மருதுபாண்டியா் நகா், கௌரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இறந்துவிட்டால் அடக்கம் செய்யப்படுகிறாா்கள். இந்த மயானம் காக்காத்தோப்பு சுந்தா் நகா் அருகே வைகை ஆற்றின் கரையோரமாக அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இதை தற்போது சிலா் போலியாக பத்திரப் பதிவுகள் செய்து ஆக்கிரமித்து வருகின்றனா். எனவே, இந்த மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சுற்றுச்சுவா் எழுப்பியும், ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.