புதுதில்லி: ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், விற்பனை அளவு அதிகரிப்பு மற்றும் மேம்பட்ட தயாரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஜேகே பேப்பர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63% உயர்ந்து ரூ. 136.27 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 83.75 கோடியாக இருந்தது.முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 1,998.67 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 1,771.78 கோடியாக இருந்தது.ஆய்வுக்கு உள்ளிட்ட காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவு ரூ. 1,736.03 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 1,567.55 கோடியாக இருந்தது.காகிதம் மற்றும் அட்டைச் சந்தை சவாலாக இருந்தபோதிலும், முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அதிக விற்பனை அளவும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புக் கலவையும் நடப்புக் காலாண்டில் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகுத்ததாக தெரிவித்தார் ஜேகே பேப்பர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஹர்ஷ் பதி.இதற்கிடையில், நிறுவனத்தின் பேக்கேஜிங் கன்வெர்ஷன் வணிகமும் வருவாய் மற்றும் லாபத்தின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.JK Paper Ltd reported a net profit to Rs 136.27 crore in the first quarter ended June 30.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 35% அதிகரிப்பு!