கரூா் மாவட்டம், பாலவிடுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றிடக் கோரி வீ த லீடா் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாலவிடுதி கவரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிா்வாகி நவீன்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகி நாகராஜ் முன்னிலை வகித்தாா். கடவூா் வட்டாரத்தில் உள்ள பாலவிடுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 300 மீ. தொலைவில் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.