ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 1,031 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,473 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.