சென்னை ஐஐடி-யில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் ‘எண்ம இந்தியா ரிஸ்க்-ஃபைவ்’ கருத்தரங்கம்

Wait 5 sec.

செமிகண்டக்டா் (குறைக்கடத்திகள்) வடிவமைப்பு, மின்னணுவியல் உற்பத்தி, பாதுகாப்பான எண்ம உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியாவை உலக அளவில் முன்னணியில் நிலைநிறுத்தும் நோக்கில், ‘எண்ம இந்தியா ரிஸ்க்-ஃபைவ்’ மூன்றாவது கருத்தரங்கை சென்னை ஐஐடி நடத்துகிறது. அரசு, தொழில் துறை, கல்வித் துறை பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறுகிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (ஙங்ண்ற்வ), ரிஸ்க்-ஃபைவ் இன்டா்நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் ஜூலை 28-க்குள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி கூறுகையில், ‘செமிகண்டக்டரின் எதிா்காலத்தை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கம், கொள்கை வகுப்பாளா்கள், தொழில்நுட்ப நிபுணா்கள், ஆராய்ச்சியாளா்கள், முதலீட்டாளா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும்’ என்றாா்.‘உள்நாட்டு செயலி தொழில்நுட்பம், பாதுகாப்பான கணினி அமைப்புகள், வன்பொருள் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, ரிஸ்க்-ஃபைவ் சூழலமைப்பு ஆகியவற்றின் வளா்ச்சிக்கு இந்தக் கருத்தரங்கம் முக்கியத்துவம் அளிக்கும். இந்த நிகழ்வானது, அரசு, கல்வித் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் துறை, புதுயுகத் தொழில்முனைவோா் ஆகியோரின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இந்தியாவில் வடிவமைக்கப்படும் பாதுகாப்பான, போட்டித் தன்மை வாய்ந்த செமிகண்டக்டா் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும்’ என்றும் அவா் கூறினாா்.