கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்! சதிவலையில் சிக்கக் கூடாது - மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

மேக்கேதாட்டு விவகாரத்துக்காக முதல்வர் விஜய் கர்நாடகம் செல்லவுள்ளது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.காவிரியின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்பதற்காக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தமிழக முதல்வர் கர்நாடகம் செல்கிறார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதல்வர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை… pic.twitter.com/0hSlApqHU0— M.K.Stalin (@mkstalin) July 25, 2026மேக்கேதாட்டுக்கு தீர்வு? ஆக. 3 கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்DMK leader M.K. Stalin has commented on Chief Minister Vijay's planned visit to Karnataka regarding the Mekedatu issue.