திருவள்ளூர் அருகே தனியார் மதுபான ஆலையில் இன்று ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால் 2 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பீர் பாட்டில்களில் நிரப்புவதற்கு கார்பன்-டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டையாக்சைடு ஆகிய வாயுக்களுடன் அமோனியா வாயுவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், லேசான அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக 2 பேருக்கு லேசான வாந்தி மயக்கம் ஏற்பட்டது.மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவுஅதாவது பீர் தயாரிப்பின்போது, அதன் இயல்பான சுவை மாறாமல் இருக்கவும், அதில் நுரை மற்றும் புத்துணர்ச்சி குறையாமல் பாதுகாக்கவும் இந்த வாயுக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில பிரிமியம் ரக பீர் வகைகளில் மென்மையான நுரை அமைப்பை பெறவும் பீர் பாட்டிலுக்குள் ஆக்ஸிஜன் புகுந்து பீர் கெட்டுப் போகாமல் தடுக்கவும் நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பீர் வகைகளை குளிர்விப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்படும்.இந்த நிலையில் திடீரென சிலிண்டரில் இருந்து லேசான அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் 2 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அந்த தொழிற்சாலையின் சார்பில் மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அனைவரும் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவுமேலும் அமோனிய வாயுக் கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் இருந்து முற்றிலுமாக அந்த அம்மோனியா வாயு வெளியேறுவது தடுக்கப்பட்டது. இந்தத் துரிதமான நடவடிக்கையால் வேறு யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.வாந்தி மயக்கம் ஏற்பட்ட இருவருக்கு தொழிற்சாலை மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது மீண்டும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்! Two people suffer from vomiting and dizziness due to an ammonia gas leak at a liquor factory